Tamil Language and Literature
1. What is ‘A’ Level Tamil Language and Literature?
இலக்கிய வடிவங்களான கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற நான்கு கூறுகளையும் படித்து மகிழ்வதுடன் அவற்றிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கும் விடையளிக்கும் திறன் பெறுவர்.
கட்டுரை எழுதுதல், கருத்துரைத்தல், கருத்தறிதல், தட்டச்சு செய்தல் ஆகிய பல்வேறு நிலைகளில் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்குவர்.
இலக்கியப் பாடம் தாள் ஒன்று கட்டுரை, தாள் இரண்டு கருத்தறிதலும்
மொழிப் பயன்பாடும், தாள் மூன்று இலக்கியம் ஆகிய மூன்று
பகுதிகளைக் கொண்டது.
2. How is TLL taught at SAJC?
தமிழ் இலக்கிய வகுப்புகள் மற்ற வகுப்புகளைப்போலவே பல்வேறு கற்பித்தல் முறைகளைக்கொண்டு கற்பிக்கப்படுகின்றன.
மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமும் அவர்களது பங்களிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பயிற்சிகள், தேர்வுகள் மதிப்பீடுகள் ஆகிய அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.
3. What can you do to prepare yourself for TLL in SAJC?
தமிழ்மொழி கற்றலில் ஆர்வமும் நல்ல தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பிழையின்றி எழுத பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.
உயர்தமிழ் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
You may also visit the following SEAB website for the detailed syllabus information.
![]() |
H2 Tamil Language and Literature Syllabus |